சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல்பருமன் குறையும். சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளை தலா இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.
சுண்டைக்காய் வற்றலுடன் மாதுளை ஓடு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
சுண்டைக்காய் வற்றல் மற்றும் ஓமம் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.
சுண்டை வற்றல் உடன் கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியன சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசியின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியன குணமாகும்.
முதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின் நீரை வடிக்கவும். ஒரு நாள் அதை மோரில் ஊறவைத்து அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் காயவைக்கவும்.
பகலில் இரண்டையும் காயவைத்து மாலை நேரம் வந்ததும் இரவு முழுவதும் மோரில் சுண்டைக்காயை ஊறவைக்கவும், இப்படி நான்கு நாட்கள் வற்றல் நன்றாக காயும் வரை காயவைக்கவும்.