Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில மூலிகை செடி வேர்களின் மருத்துவ பலன்கள் !!

Webdunia
ஆவாரை வேர்: முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால், ஆவாரை வேரை எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும்.
 

நொச்சி வேர்: நொச்சி வேர் ஒருபிடி, வேப்பெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து மண்சட்டியில் விறகு அடுப்பில் காய்ச்சி மார்பு, விலா, முதுகு ஆகிய இடங்களில் தடவி வர ஆஸ்துமா குறையும்.
 
கீழாநெல்லி வேர்: கீழாநெல்லி வேருடன், சீரகம் கொஞ்சம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையை தினமும் சாப்பிட்டு காய்ச்சிய பசும்பால் 1 டம்ளர் குடித்துவர, சிறுநீர் கடுப்பு பிரச்னை நீங்கும்.
 
முற்றின வெள்ளைக் கற்றாழை வேர்: வெள்ளை கற்றாழை வேரை நிழலில் உலர்த்தி அதை நன்றாகப் பொடி செய்து நெய்யில் குழப்பி கண்ணில் ஒற்றிக்கொள்ள கண்ணில் உள்ள பூ போகும்.
 
தூதுவளை வேர்: தூதுவளை வேரையும், தூதுவளைக் கீரையுடன் ஓமம், பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூதக வாயு சம்பந்தமான வியாதிகள் குணமாகி, மலத்தை இளக்கும்.
 
ஆலமரத்தின் வேர்: ஆலமரத்தின் இளம் வேர்களுடன், செம்பருத்திப் பூவையும் காய வைத்து இடித்துத் தூள் செய்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாக வளரும்.
 
நன்னாரி வேர்: நன்னாரி வேரை கற்றாழைச் சோற்றுடன் கலந்துண்ண விஷக்கடியினால் உண்டாகும் பக்க விளைவுகள் குணமாகும். நன்னாரி வேரையும், ஆலம்பட்டையையும், ஆவாரம்பூவையும் சேர்த்து கஷாயம் செய்து வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் முகத்தில் படரும் கருமை போய்விடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழைக்காய் உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

புதினாவை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments