Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தை பொலிவுற செய்யும் பழங்களும் அதன் பலன்களும்...!

Webdunia
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தாலே சருமம் பொலிவடையும். ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் கொலாஜன்கள் சரும செல்களை புத்துணர்ச்சி தந்து, செல்களின் அமைப்பை பாதுகாத்து, வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தை  தக்கவைக்கிறது.
பப்பாளியில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. பப்பாளியில் இருக்கும் பாப்பெயின் எனும் என்சைம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சரும  நோய்கள் வருவதைத் தடுக்கிறது. பாப்பாளியை சாறு எடுத்து முகத்தில் தடவிவந்தால், முகம் பொலிவாகும்.
 
வாழப்பழம் எளிதில் கிடக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் நிறைந்திருப்பதால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசை வலி,  வெடிப்புகளைத் தடுக்கும். வாழைப்பழத்தை மசித்து வாரம் ஒருநாள் ஃபேஷியல் செய்தால், தோல் சுருக்கங்கள் நீங்கும்.
 
எலுமிச்சைப்பழம் சாற்றை முகத்தில் பூசி மசாஜ் செய்தால், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்களை நீக்கும். அழுக்குகளை வெளியேற்றும். எலுமிச்சையுடன் தேன் சேர்த்து மசாஜ் செய்தால், தோல் மிருதுவாகும்.
 
வெள்ளரியில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா நிறைவாக உள்ளன. வெள்ளரித் துண்டுகளை வெட்டி கண்மேல் வைத்து 20 நிமிடங்கள் கழிந்த பின்,  வெள்ளைத் துணியை நீரில் நனைத்து முகத்தைத் துடைக்க கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் போகும். வெள்ளரி ஜூஸ் இளமைத் தோற்றத்துக்கு உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments