Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துளசி செடியில் உள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் !!

Webdunia
பலரது வீடுகளில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடிக்கு விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. வீடுகள் மற்றும் கோவில்களின் முற்றங்களில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று  மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
 
இந்துக்கள் அதிகாலையில் துளசி செடியை சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். அதிகாலை மூன்று மணி முதல், ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இயற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும்.
 
இயற்கையாகவே, காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துளசிச் செடியைச் சுற்றி வந்தால் பரிசுத்தமான ஆக்ஸிஜனை  சுவாசிக்கலாம்.
 
துளசி ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் வராமல் தடுக்கலாம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வராது.
 
மருத்துவத்தில் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இல்லாத ஆயுர்வேத் மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல்  பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல்  போய் விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments