Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புருவம் அடர்த்தியாக வளர இந்த அழகு குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க...!

Webdunia
பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும்.
புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. சரி புருவம் போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தால் என்ன செய்யலாம். பலன் தரும் இந்த  குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள். 
 
புருவமே இல்லாதவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே நல்ல தரமான மையை புருவத்தில் வைத்து விட்டு வந்தால் புருவம் அதே வடிவத்தில்  அழகாக வளரும். ஐ ப்ரோ பென்சிலால் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய்யால் தொட்டு புருவத்தில் வரைந்து கொண்டு  தூங்கினால் புருவம் அடர்த்தியாக வளரும். 
 
விளக்கெண்ணெய்: தினமும் தூங்குவதுற்கு முன்பு புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்துவந்தால் இரண்டு மாதங்களில் புருவம் அடர்த்தியாக  மாறுவதைக் காணலாம். 
 
தேங்காய் எண்ணெய்: ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்து வர பலன்  தெரியும். 
 
வெங்காயச் சாறு: வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து தினமும் படுப்பதற்கு முன்பு தடவி வந்தால், புருவத்தில் விரைவில் முடிவளர்வதை வளர்வதை நம்மால் காணமுடியும். 
 
கற்றாழை: கற்றாழை சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தேய்த்து வருந்தால், அங்கு ஏற்பட்டுள்ள தொற்று நீங்கி முடி வளர ஆரம்பித்துவிடும்.
 
சீரம்: புருவ சீரம் கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன் முகத்தை கழுவிய பின், சீரத்தை ஒரு பிரஷினால்  புருவத்தில் தடவ வேண்டும். மறுநாள் காலையில் கழுவுங்கள். இப்படி செய்வதால் புருவ முடிகள் தூண்டப்பட்டு, முடி வளர ஆரம்பிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments