Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில பயன்தரும் பெண்களுக்கான வைத்திய குறிப்புக்கள் பற்றி பார்ப்போம் !!

Medical Tips
, திங்கள், 27 ஜூன் 2022 (10:52 IST)
வல்லாரைக் கீரை சாற்றில் பெரும் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் சரியாகும்.


லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின்போது  ஏற்படும் அதிக இரத்தப்போக்கு நிற்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.

முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் கருப்பை பலப்படும்.

பச்சை இலை காய்கறிகள்: முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, போலேட் மற்றும் நார்ச்சத்துகள், தாதுக்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும். இவற்றுள் போலேட் மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது பிறப்பு குறைபாடுகளை தடுக்கக்கூடியது.

மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தாள், காய வைத்த கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும் மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இருவேளையும்  ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஏற்படும்.

விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கால் புண் விரைவில் குணம்பெற உதவும் குறிப்புகள் !!