Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேம்பின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்....!!

Webdunia
காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து மைபோல் அரைத்து, அதைனை வெடிப்பின் மேல் நன்றாகத் தடவி மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவிவிட வேண்டும். இப்படி செய்து வந்தால் பித்த வெடிப்புகள் மறையும்.

நகச்சுத்தி ஏற்பட்டால் எலுமிச்சம் பழத்தில் துளையிட்டு அதை விரலில் சொருகிக் கொண்டால் குணமாகிவிடும். இருப்பினும், இந்த நோய் வந்ததும் வேப்பிலையை  மைபோல் அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து, அதை நோய் கண்ட இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.
 
வேப்பிலையுடன் வேலிப்பருத்தி இலை, மஞ்சள் சேர்த்து மைபோல அரைத்து கட்டியைச் சுற்றிலும் பற்றுப்போட்டு வந்தால் கட்டி உடைந்துவிடும். வெந்நீர், வடிகஞ்சி, நெருப்புச்சுட்ட புண்ணுக்கும் இத்தகைய பற்று போடலாம்.
 
வேப்பம் பழத்தில் செய்யும் சர்பத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தம் சுத்தமடையும். தோல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சொறி, சிரங்குகளை உற்பத்திச் செய்யும் நுண்கிருமிகள் அழியும்.
 
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆறிய தண்ணீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும்  குணமாகும்.
 
வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை மற்றும் மாலை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் தீரும். மாதம் ஒரு முறை வேப்பிலையை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும்.
 
வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி சம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட்டால் காற்றில் உள்ள கிருமிகளை அழித்து விடும். அதே போன்று இலைகளை உலர்த்தி தூபம் போட்டால் கொசு போன்றவை வீட்டிற்குள் வராது.
 
வேம்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், மாதம் ஒருமுறை வேப்பம் பூ ரசம், துவையல் போன்றவை செய்து சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments