Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பழங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (10:03 IST)
மாம்பழத்தில் தாது உப்புக்கள், நார்ச்சத்து, பீட்டாக்கரோட்டீன், மாவுச்சத்து மற்றும் விட்டமின் சி ஆகியன உள்ளன. இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கேல்சியம் ஆகியவை குறைவாகவே உள்ளது.  


மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்களை போக்கும், கண்களுக்கும் நன்மையைத் தரும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள்  உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு மட்டுமே சாப்பிட வேண்டும்.

பலாப்பழத்தில் சர்க்கரையின்  அளவு அதிகமாக உள்ளது. இதில் ஓரளவு நார்ச்சத்து குறைந்த அளவு புரோட்டீன், இரும்பு, கால்சியம் உள்ளது. இதில் உள்ள பயன்கள் மலச்சிக்கலை போக்கும்.

வாழைப்பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். வாழைப்பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும். உடல் எடை குறைவாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் வீதம் சாப்பிடலாம்.

வாழைப்பழம் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும், மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பிரச்சனை இருந்தால் அதனையும் குணமாக்கும். கண் பார்வை குறைவது போன்று இருந்தால் செவ்வாழைப் பழத்தை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் முக அழகிற்கு பயன்படுத்துவர். ஏனெனில் அதில் அதிக அளவு விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி2 ஆகியன உள்ளன. இரவில் தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் அரை டம்ளர் ஆரஞ் பழச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments