அவரைக்காயில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்...!!

Webdunia
ஒபேசிட்டி பிரச்சினை உள்ள பலருக்கும் அவரைக் காயானது பரிந்துரைக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் அதில் உள்ள நார்ச்சத்துகளே ஆகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கச் செய்கிறது.

அவரைக்காய் அதிக அளவில் புரதச்சத்துகளைக் கொண்டதாகவும் உள்ளது, இதனால் தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது.  மேலும் அவரைக் காயில் நல்ல கொழுப்பு, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவைகள் உள்ளன.
 
அவரைக்காய் உயர் இரத்த அழுத்தம், உயர் சர்க்கரை போன்ற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருந்து வருகின்றது, மேலும் அவரைக்காயினை குழம்பாக வைத்து சாப்பிடுவதைவிட பொரியலாக சாப்ப்பிடுவடு மிகச் சிறந்த செரிமான சக்தியினைக் கூட்டுவதாக உள்ளது.
 
அவரைக்காய் பித்தத்தினைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது,  நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாரத்தில் 2 முறை அவரைக்காய் எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் அவரைக் காயில் வாயு உள்ளதால் குழந்தைகளுக்கு குறைந்த அளவில் கொடுத்தல் நல்லது. மேலும் இது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும்  இது சரி செய்கிறது.
 
ரத்த நாளங்களில் அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை குறைக்கும் தன்மை உடையது. எனவே இதனை ரத்த அழுத்தம், இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
 
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அவரைக்காய் உண்பதினால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments