Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக உள்ள செம்பருத்தி பூ !!

Webdunia
செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

செம்பருத்தி பூவின் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வர முடி கருத்து அடர்த்தியாக வளரும்.
 
உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
 
செம்பருத்தி பூ குளிர்ச்சியானது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளக்க செய்யும். பூக்களை அரைத்து தலையில் தடவி  ஊறவைத்து குளித்தால் பேன்கள் குறையும்.
 
10 பூக்களின் இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை  உண்டாக்கும்.
 
கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணி செம்பருத்தி பூக்கள். பூவிதழ்களை 200 மி.லி நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
 
செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டை தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நோய் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை நேரத்தில் உடல்நலத்தை காக்க சில டிப்ஸ்

கனவுகளுக்குள் தொடர்பு கொள்ளும் புதிய டெக்னாலஜி! அமெரிக்க நிறுவனம் சாதனை!

நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு என்ன செய்ய வேண்டும்?

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கெடுதலா?

சுரைக்காய்க்கு உப்பு இல்லை.. இந்த கிண்டலான வாக்கியத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments