Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் மூலிகை பொருட்களும் பயன்களும் !!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (15:24 IST)
பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் என்ற நிறமி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது பீட்ரூட் சாறு அருந்துவது கார்சினோஜென் என்னும் புற்றுநோய் காரணிகளை உடலில் சேராமல் தடுக்கும். பீட்ரூட்டை சாப்பிடுவது கல்லீரல் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.


புளிப்பான திராட்சை பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது குடல் நன்றாக செயல்பட உதவுவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. திராட்சையில் உள்ள "நாரின்ஜெனின்" என்ற ஆன்டிஆக்சிடன்ட் கல்லீரல் கொழுப்பை நீக்க உதவுகிறது.

விஷ்ணு கிராந்தியில் டீ போட்டு குடிப்பது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. சிலர் இதை சாலட்களிலும் பயன்படுத்துகிறார்கள்." சிலிமரின்" என்ற ஆண்டி ஆக்சிடென்ட் மற்றும் வீக்கத்தை குறைக்கும் நிறம் இதன் விதைகளில் உள்ளது. இவை கல்லீரல் நச்சு வெளியேற்ற உதவுவதோடு மட்டுமல்லாமல், கல்லீரலை சேதப்படுத்தும் "டைல்மோல்" என்ற மருந்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் காப்பாற்றும். புதிய செல்கள் வளர உதவி செய்து, கல்லீரலை புத்துயிர் ஊட்டவும் விஷ்ணுகிராந்தி உதவுகிறது.

மஞ்சளில் கல்லீரல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

அரைக் கப் க்ரீன் டீயை ஆறவைத்துக்கொண்டு, அத்துடன் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை சேர்க்க வேண்டும். இதை தினமும் குடித்துவர கல்லீரல் சுத்தமாகும். கிரீன் டீயில் ஈ.ஜி.சி.ஜி என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது கல்லீரலை பாதுகாக்க உதவும்.

அரை தேக்கரண்டி மஞ்சள், சிறிய துண்டு இஞ்சிச்சாறு, பாதி எலுமிச்சை சாறு இவற்றோடு அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும். .அனைத்தையும் ஒன்றாக கலந்து குடித்து வர வேண்டும். இது குடலை சுத்தம் செய்யும். பித்தக் கற்கள் வருவதை தடுப்பதோடு கல்லீரலை சுத்தப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments