Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள நெல்லிக்காய் !!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:11 IST)
நெல்லிக்காய் மருத்துவ குணங்களை அதிகம் கொண்டது. இதில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.


நெல்லிக்காய் செரிமானத்திற்கும் உதவுகிறது, ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் ஆனது முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

நெல்லிக்காய் சோர்வான, மந்தமான உடல்களை உற்சாகப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான தூக்க முறைகளை ஊக்குவிக்கிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைத்து நல்ல வடிவத்தை பெற உதவும். நெல்லிக்காய் சாறு செரிமான அமைப்பை வலுப்படுத்தும். உடன் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments