Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துகள் நிறைந்த புதினா...!

Webdunia
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
புதினா இலையில் வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை  குணமாக்கும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக்  குணமாக்கும்.
 
புதினா எண்ணெய் தலைவலி, வாதம் மற்றும் பிற வலிகள் போன்றவற்றிற்காக தடவுகின்ற களிம்பு, வயிற்றுக் கோளாறு மருந்துகள், இருமல்  மருந்துகள், வாய் கொப்பளிக்கும் தைலம் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகின்றது.
 
புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி  தூண்டப்படும். மலசிக்கலும் நீங்கும். மேலும் ஆன்மை குறைவை நீக்கும்.
 
ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகிறது. வாய்வுத்  தொல்லையை அகற்றுகின்றது.  
 
மஞ்சள் காமாலை, வாதம் வரட்டு இருமல், சோகை நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments