Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தை பளபளக்க செய்யும் இயற்கை ஃபேஷியல் முறைகள்...!

Webdunia
பொதுவாக குளிர் காலத்தில் பனியின் கரணமாக அனைவரின் முகமும் வறண்டு விடும். இந்த நிலையை மாற்றி உங்கள் முகம் பட்டுபோல் மின்ன உதவும்  ஐந்து ஃபேஷியல் முறைகள்.
1. பாதாம் ஃபேஷியல்: பாதாம் பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும்  எலுமிச்சை சாறு சேர்த்து, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால், நீங்கள் பியூட்டி பார்லருக்கு போக வேண்டியதே இல்லை
 
2. மஞ்சள் ஃபேஷியல்: மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றினால் உங்கள் சருமம்  அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
 
3. தேன் ஃபேஷியல்: 1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி  15  நிமிடங்கள் வைத்தால் வறண்ட சருமம் மிருதுவாக மாறும்
  
4. ஓட்ஸ் ஃபேஷியல்: ஓட்ஸ், தயிர் , தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில்  உங்களின் சரும நிறம் பொலிவடைந்திருப்பதை உணரலாம்.
 
5. எலுமிச்சை ஃபேஷியல்: 1/2 கப் பாதாம் எண்ணெய் இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும் முகத்தை  நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments