Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா தீமையா....?

Webdunia
வயதோதிகம் ஏற்படும்போது கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் உண்டாகிறது. முட்டையானது விட்டமின் ஏ, லடீன், ஸீஸாக்தைன் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது. 
முட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
 
முட்டையில் உள்ள விட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
 
ஹைப்போகொலஸ்ட்ரலோமியா நோயால் அவதிப்படுபவர்கள் முட்டையை தவிர்ப்பது நலம். அதிகப்படியான முட்டை உண்பது டைப் 2  சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
முட்டையை தேர்வு செய்யும்போது புதிதானதாக இருக்க வேண்டும். கீறிய, உடைந்த முட்டைகளை தவிர்ப்பது நலம். முட்டையை நீரில் போடும்போது மிதந்தால் அது கெட்டது என்பதை அறியலாம்.


 
முட்டையினை ஒரு மாதம் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு ஒரு டஜன் முட்டை வரை  உண்ணலாம்.
 
ஆரோக்கியமான உணவினை உண்டு இயற்கை சூழலில் வாழும் கோழியிலிருந்து பெறப்படும் முட்டையே அதிக சத்துக்களை உடையது. ஆதலால் இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டை வாங்கி உபயோகிப்பதே சிறந்தது. குறைந்த விலையில் விலைமதிப்பில்லா  ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வது பயன் தரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments