Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் கிடைக்கக் கூடிய கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்...!

Webdunia
கறிவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.
கறிவேப்பிலை இலைத் துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. இதன் இலை, பட்டை, வேர்  இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும்.
 
பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கறிவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
 
கறிவேப்பிலை மலத்தின் திராவம் சத்தை வற்றச் செய்யவல்லது. வயிற்றிலுள்ள வாயுவைப் பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். நல்ல பசி, ருசி, ஜீரண சக்தியைத் தரும். மலக்கட்டு, வாயுக்கட்டுகளைப் போக்கி மலத்தை வெளியாக்கவல்லது.
 
இந்த கறிவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
 
கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும்.
 
கறிவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும் மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை  நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
 
நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலக்கட்டு போன்ற நோய்கள் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments