Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் முருங்கைக்கீரை...!!

Webdunia
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

முருங்கைக்கீரை ஒரு மருத்துவ குணம்மிக்க மூலிகை. மற்ற கீரை வகைகளை விட அதிக அளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் முருங்கை கீரையில் நிறைந்துள்ளன. முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’  கிடைக்கிறது.
 
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நல்ல ரத்தம் ஊறும். பற்கள் பலப்படும், முடி நீண்டு  வளரும், நரை முடி ஏற்படுவது குறையும் மற்றும் தோல் வியாதிகள் நீங்கும்.
 
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
 
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து வேறில்லை. முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு உடலுக்கு  தேவையான சத்துக்கள் எளிதில் கிடைக்கும்.
 
முருங்கைக்கீரை சூப்பானது ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு நல்லது. முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் மற்றும் உடலில் உள்ள வலிகள் நீங்கும்.
 
மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு முருங்கைக்கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முருங்கைக்கீரையை வாரத்தில் குறைந்தது  ஒருமுறையாவது உணவுடன் எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
 
முருங்கைக்கீரையை சூப் போல செய்து சாப்பிட்டால் மூட்டு வலி பறந்து போய்விடும். முருங்கைக்கீரையானது கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை  ஊக்குவித்து பிரசவத்தை விரைவுபடுத்தும். முருங்கை கீரையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுவானது தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments