Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருமல் தொல்லையிலிருந்து உடனடி நிவாரணம் தரும் சுக்கு !!

Webdunia
சனி, 14 மே 2022 (09:07 IST)
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.


சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.

வயிற்றில் எரிச்சல் ஏற்படும்பொழுது, அதனை சரிசெய்ய, கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால், இருமல் தொல்லையிலிருந்து விடுபட உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மூக்கு ஒழுகல் இருந்தால். அப்போது இஞ்சி டீ செய்து, அதில் வெல்லம் சேர்த்து குடித்தால் மூக்கு ஒழுகல் நின்றுவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments