Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீத்தாப்பழ விதைகள் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...?

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (09:51 IST)
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.


சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும். சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை பொடி முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடியில் டீ தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்