Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகிழம் பூவில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?

Webdunia
பூவின் நறுமணத்திற்காகவே பூங்காக்கள், வீடுகள் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படுகிறது. மகிழம்பூ சிவனுக்கு உரியது என்பதால் பெரும்பாலும் இது சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும்.

மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.
 
பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும்.
 
கருவேலம் பற்பொடியில் பல் துலக்கி மகிழ இலைக் கியழத்தால் வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் தீரும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.
 
மகிழம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை மூக்கில் உறிஞ்சினால் தலையில் கோர்த்து கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலைபாரம் நீங்கும்.
 
10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்.
 
மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அறிந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்