Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடந்து அத்திப்பழம் சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

Webdunia
கால்சியம் சத்து அதிகம் கிடைக்க அத்திப்பழம் சாப்பிடலாம். உணவு உண்டபின் அத்திப்பழம் சாப்பிட்டால், விரைவில் செரிமானத்தை ஏற்படுத்தி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

100 கிராம் அத்திப்பழத்தில் 107 கலோரிகள் உள்ளன. குறிப்பாக கொழுப்புச் சத்து 0.1 கிராம் உள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி 12 ஆகியவை அதிக அளவில் கிடைக்கின்றன.
 
உடம்பில் ஏற்படும் பித்தம், ஈரல், நுரையீரல் பிரச்சினை மற்றும் வாய் துர்நாற்றத்தை அத்திப்பழம் நீக்குகிறது. மற்ற பழங்களில் கிடைக்கும் சத்துகள் அத்திப்பழங்களில் நான்கு மடங்கு கிடைக்கின்றன.
 
தினசரி இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உணவு உண்ட பின் சிறிதளவு அத்திப்பழங்களைச் சாப்பிட்டால் விரைவில் மலச்சிக்கல் தீரும்.
 
கல்லீரல் வீக்கத்தைப் போக்க, அத்திப்பழத்தை ஒரு வாரம் வினிகரில் ஊறவைத்து, அதன் பின் தினமும் இரண்டு சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெறும், முழு அளவு ஊட்டச்சத்தையும் பெற முடியும்.
 
தினசரி இரண்டு அத்திப்பழங்களைச் சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும். இதனால் எலும்புகள் பலம் பெறும். தினமும் ஒருவேளை சிறிதளவு சீமை அத்திப்பழம் சாப்பிட்டால், வெண்புள்ளிகள் குணமாகும். தோலில் ஏற்படும் நிறமாற்றங்கள் விரைவில் சரியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments