Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோம்பு விதைகளில் உடலை வலுப்படுத்தும் சத்துக்கள் உள்ளதா...?

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (12:03 IST)
பெருஞ்சீரகம் சமையலில் நறுமண பொருளாகச் சேர்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பல்வேறு சத்துப் பொருட்களும் இதில் அடங்கியிருக்கின்றன.


சோம்பு விதைகளின் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், தாதுபொருட்கள்,  வைட்டமின் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன.

பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் சோம்பு விதைகளில் உள்ளன. சோம்பு விதைகளில் எளிதில் கரையக்கூடிய நார்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. இவை உட்கொள்ளும் உணவை எளிதில் செரிக்க வைக்கின்றன. மேலும் மலச்சிக்கலை சீராக்குகிறது.

உடலுக்கு வலுவூட்டும் தாதுப்பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம்,  செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன, தாமிரம் தாது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது.

சோம்பு விதைகளில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும் செரிமானத்திற்கும் இது அவசியம்.

வைட்டமின் ஏ, இ, சி போன்றவையும் பி குழும வைட்டமின்களான தயாமின், பைரோடக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments