Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாச கோளாறுகளுக்கு நன்மை செய்யும் கறிவேப்பிலை !!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (13:16 IST)
கறிவேப்பிலை இளநரையை தடுக்கிறது. முடி உதிர்தலையும் தடுக்கிறது. மெலிந்த கூந்தலுக்கு வலிமை சேர்க்கிறது. தலை முடி வேர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து முடி உதிர்வதை தடுக்கிறது. 

கறிவேப்பிலையில் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக உள்ளதால் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை  பாதுகாப்பதில் பெரும் உதவியாக இருக்கிறது. கறிவேப்பிலை எண்ணெய் ஈறுகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. வாய் நாற்றத்தையும் போக்குகிறது. மேலும் நுண்ணுயிர்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. 
 
கறிவேப்பிலையை தினசரி சாப்பிடுவதால் இதய தசைகளை வலுப்படுத்துகிறது. இரத்தத்தில் உண்டாகும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.இது மாரடைப்பு மற்றும் இரத்த கட்டிகள் வருவதையும் தடுக்கிறது.
 
கறிவேப்பிலை மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள பயோஆக்டிவே கூறுகளின் தன்மை மூளை ரசாயனங்கள் உள்ளிட்ட  நினைவகங்களை அதிகரிக்க செய்கிறது. 
 
தினசரி உணவில் கறிவேப்பிலையை தவறாமல் சேர்த்துக் கொள்வது சிறந்த டானிக் மற்றும் நல்ல தூண்டுதலாகவும் இருக்கிறது. இது அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற மன நோய்கள் வராமல் தடுக்கிறது. 
 
பொடியை ஒரு ஸ்பூன் அளவு மோரில் கலந்து குடிப்பதால் இரைப்பை குடல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். கறிவேப்பிலை வேர் பொடி சேர்த்து கொண்டால் சிறுநீரக கோளாறுகள் சரியாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments