Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருமா...?

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (09:25 IST)
தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் உள்ளது.


பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் அதை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கும்.

வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் கண்பார்வை மங்கலாகும். பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.

பேரிச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் தளர்ச்சி, நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும். மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கும்.

பேரிச்சம்பழத்தில் சோடியம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் பொட்டாசியம் அதிகமாக இருக்கும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தை தடுத்து எலும்புகளுக்கு வலுவூட்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீவிர உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: முக்கிய எச்சரிக்கை

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

அடுத்த கட்டுரையில்
Show comments