Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்று நோய்களை குணப்படுத்த உதவும் கிராம்பு !!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (11:55 IST)
கிராம்பில் வைட்டமின் A, C, D, E, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தியாமின், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது.


தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது பின்வரும் சிக்கல்களிலிருந்து விடுபட உதவும்.

உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

பல்வலி, பற் சொத்தை, ஈறு பிரச்சனைகள், வாய் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஒன்றிரண்டு கிராம்பை மென்று வாயில் வைத்திருந்து பொறுமையாக சாப்பிட்டால் ஈறு, பல்வலி போன்றவை நீங்கும்.

இரவில் கிராம்பை சாப்பிடுவது சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. குமட்டல், எதுக்களித்தல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments