Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையினை சீராக பராமரிக்க உதவும் செர்ரி பழம்...!!

Webdunia
செர்ரிப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம். அதாவது செர்ரிப் பழம் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

மேலும் இது மற்ற உணவுப் பொருட்களால் கிடைக்கும் வைட்டமின்கள், தாது உப்புகள் என அனைத்தையும் எளிதில் உணவு மண்டலத்தால் உட்கிரகிக்கச் செய்கின்றது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான இளமையில் முதுமையான தோற்றம், வறண்ட தோல், தோல் சுருக்கம் என அனைத்துவகையான  பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக அமைகின்றது.
 
கண் பார்வைத் திறனை அதிகரிப்பதாகவும், இதனால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் செர்ரிப் பழத்தினை எடுத்துக் கொள்ளப்  பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
 
உடலில் நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவர்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் மேற்கண்ட பாதிப்புகள்  கொண்டவர்கள் செர்ரி அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. 
 
செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.
 
நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை  குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். செர்ரி பழம் உடல் எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
 
செர்ரிப் பழமானது அதிக நார்ச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இதனால் உடலின் கெட்ட கொழுப்பினைக் குறைத்து, உடல் எடையினை சீராகப் பராமரிக்க உதவுகின்றது. மேலும் செர்ரிப் பழம் மிகவும் சிறப்பான செரிமான சக்தியினைக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments