Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோய் வராமல் தடுத்திடும் தன்மை கொண்ட தக்காளி!

Webdunia
மலச்சிக்கலை போக்கக்கூடியதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையதும், கொழுப்பை கரைக்க கூடியதுமான  தக்காளியின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தக்காளி.
 
 
விட்டமின் சி சத்து நிறைந்த இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மார்பக புற்று, குடலில் புற்று வராமல் தடுக்கிறது. இதில், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. 
 
1.) தக்காளி செடியை பயன்படுத்தி சிறுநீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், கைகால் வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். 
 
தேவையான பொருட்கள்: தக்காளி இலை மற்றும் தண்டு, சீரகம். செய்முறை: தக்காளி இல, தண்டு பகுதியை ஒரு கைப்பிடி  அளவுக்கு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை,  மாலை வேலைகளில் 50 முதல் 100 மில்லி குடிப்பதால் சிறுநீரை பெருக்கும். கை, கால், முகத்தில் ஏற்படும் வீக்கம், உடலில்  உள்ள தேவையற்ற நீரை குறைக்கிறது. சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும்.
 
2.) உணவாக பயன்படும் தக்காளி உன்னதமான மருந்தாகிறது. தக்காளியை பயன்படுத்தி மலச்சிக்கல், உடல் எடையை குறைக்கும்  மருந்து தயாரிக்கலாம்.
 
தேவையான பொருட்கள்: தக்காளி, நல்லெண்ணெய், உப்பு, மிளகு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில், தக்காளி துண்டுகளை போட்டு வதக்கவும். சிறுது உப்பு, மிளகுப்பொடி சேர்த்து கலந்து காலை வேளையில் 100 முதல் 200 கிராம் எடுத்துவர மலச்சிக்கல் சரியாகும். உடல் எடை குறையும். கொழுப்பை கரைத்து ரத்த  ஓட்டத்தை சீர்செய்யும், தோல், எலும்பு, பற்கள், கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments