Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலும்பு தேய்மானம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுமா சர்க்கரை வள்ளிக்கிழங்கு !!

Webdunia
சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் உணவுகளை சாப்பிடுவது செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கும். இதன் மூலம் வயதான தோற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தவிர்க்கப்படும். மேலும் நாள்பட்ட நோய்களை தடுக்கவும் உதவும். 

வழக்கமான சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் ஒப்பிடும்போது ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆன்டி ஆக்சிடென்ட் நன்மைகளை அதிகம் கொண்டிருக்கும்.
 
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்களாகும். ஆட்டோ இம்யூன் உள்ளிட்ட கொடிய நோய்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு இந்த இரண்டு வைட்டமின்களும் உள்ளடங்கி இருக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 
 
மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அபாயத்தை குறைக்கும். 
 
வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது. இவை ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன. எலும்பு தேய்மானம் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன.
 
நீரிழிவு நோய் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பது தவறான கருத்தாகும். 
 
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. இது கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது. 
 
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலிருக்கும் ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.
 
உயர் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதற்கு தயங்க வேண்டியதில்லை. ஏனெனில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments