எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெற உதவுமா கருப்பட்டி...?

Webdunia
கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி.

கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். மேலும் கருப்பட்டி கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
 
பதநீரை காய்ச்சி அதிலிருந்துபெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவகுணம் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது  ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
 
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
 
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்து வந்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
 
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments