Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோரை உடல் ஆரோக்கியத்துக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்!

Webdunia
மோர் உடலுக்கு மட்டுமல்ல அழகிற்கும் பலவித நன்மைகளை செய்கிறது. மோர் சருமம் மற்றும், கூந்தலின் பளபளப்பிற்கு  உறுதி யளிக்கும். அதன் நன்மைகளையும், அழகுபடுத்தும் செய்முறைகளை பார்ப்ப்போம். மோரைக் கொண்டு எப்படி சருமம் மற்றும் கூந்தலை அழகுப்படுத்தலாம் என இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். தினமும்  ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 
இயற்கையான ப்ளீச்சிங்காக செயல்படுகிறது. அதிக லாக்டிக் அமிலம் இருப்பதால் கருமையை போக்கும். முகப்பரு தழும்பை  மறையச் செய்யும். சருமத்தை இறுக்கும். சரும அலர்ஜிகளை குணப்படுத்தும். சூரியக் கதிர்களால் உண்டாகும் பாதிப்புகளையும்  அலர்ஜிகளை தடுக்கும்.
 
சருமத்தை சுத்தப்படுத்தும். இறந்த செல்களை அகற்றும். எண்ணெய் பசையை குறைக்கிறது. கடலைமாவு, பயிற்றம் மாவு  முல்தானி மட்டி என இவைகளுடன் கலந்து உபயோகித்தால் மாசு பரு இல்லாத சுத்தமான சருமம் கிடைக்கும்.
 
கூந்தலின் அழுக்குகளை அகற்றும். பொடுகை கட்டுப்படுத்தும். வறட்சியை தடுக்கும். கூந்தல் வளர்ச்சியை தூண்டும். முடி உதிர்தலை தடுக்கிறது. உடல் சூட்டை தணிக்கிறது. மோரிலுள்ள புரதம் கூந்தலுக்கு போஷாக்கை அளிக்கிறது.
 
முட்டையை அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் மற்றும் கால் கப் மோர் கலந்து தலையில் மாஸ்க்  போல் போட்டால் கூந்தல் வளர்ச்சி இரட்டிப்பாகும். வாரம் ஒரு முறை அல்லது இருமுறை செய்யலாம்.
 
மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments