Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ள பாகற்காய் !!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (18:03 IST)
பாகற்காயில் குழம்பு, கூட்டு, பொரியல், வறுவல், சிப்ஸ், பக்கோடா போன்று பலவகையாக செய்து சாப்பிடலாம். அனால் பாகற்காய் வைத்து ஒரு சுவையான ஆரோக்கியமான டீ தயாரிக்க முடியும்.


பாகற்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும்போது பாகற்காயின் சாறு தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அந்த சாறினை வடிகட்டி எடுத்தால் உடலுக்கு நன்மை தரும் பாகற்க்காய் டீ தயார். இந்த பாகற்காய் டீயில் கசப்பு தெரியாமல் இருக்க சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். அனால் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்த்து கொள்ள கூடாது. அப்படியே குடிக்க வேண்டும்.

இந்த டீயை தொடர்ந்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் நீங்கி விடும். சர்க்கரையின் அளவு சீராகும். இந்த டீ எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு இயற்க்கை பானமாகும்.

அதிக நேரம் எடுக்காமல் உடனடியாக தயாரிக்கக் கூடிய ஒரு டீயாகும். கசப்புத் தன்மையை பற்றி நினைக்காமல் தொடர்ந்து இதனை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்து விடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

வல்லாரை கீரை சாப்பிடிவதால் கிடைக்கும் பலன்கள்..!

ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது?

வாழைக்காய் உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments