தினமும் உணவில் முளைகட்டிய பயறு தரும் பயன்கள் !!

Webdunia
முளைகட்டிய உளுந்து: புரதம், பொட்டாசியம், கால்சியம், நியாசின், இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது. 


நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் சோர்வாக இருக்கும். அவர்கள் உடல் வலுப்பெறுவதற்கு அதிகமாக முளை கட்டிய உளுந்தை  சாப்பிடலாம்.
 
முளைகட்டிய கம்பு: முளைகட்டிய கம்பை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலம் தரும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைச் சரிசெய்யும். மேலும் இது உடல் சூட்டைக் குறைக்கும். சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
 
முளை கட்டிய பாசிப்பயறு: முளை கட்டிய பாசிப் பயிற்றை சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதில் புரதம், பொட்டாசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை அதிகளவில் இருக்கின்றன.
 
முளைகட்டிய தட்டை பயறு: முளைகட்டிய தட்டை பயிற்றில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகள் அதிகம் உள்ளது.
 
முளைகட்டிய சோயா பயறு: குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு முளைகட்டிய சோயா பயறு உதவுகிறது. இதில் துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம், புரதம், இரும்பு, ஃபோலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், ஒமேகா 3 வகை கொழுப்பு, மாவுச்சத்து, பீட்டாகரோட்டின், தயாமின், ரிபோஃபோமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக  அளவில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் கோதுமை உணவை எடுத்து கொள்வதால் ஏற்படும் நலன்கள்..!

வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனை ஏற்படுமா?

தினசரி உணவில் பருப்பு வகைகள் சேர்ப்பது உடலுக்கு நன்மையா?

காலிபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

உருளைக்கிழங்கு: நன்மையா, தீமையா? - அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

அடுத்த கட்டுரையில்
Show comments