Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்கும்முன் வெங்காயச் சாற்றை பாதங்களில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

Webdunia
வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே, நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது.
வெங்காயம் இல்லாத வீடும் இருக்காது. வெங்காயம் இல்லாத சமையலும் இருக்காது. அதுதவிர அழகு சார்ந்த விஷயங்களிலும் பயன்படுத்துகிறோம்.
 
நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.
குறிப்பாக, தலைமுடி உதிர்தலைத் தடுக்கவும் அடர்த்தியான கூந்தலைப் பெறவும் ஆனியன் ஜூஸ் உதவுகிறது. அதைத்தவிர இன்னும் முக்கியமான பலனும் ஆனியன் ஜூஸில் இருக்கிறது.
 
தினமும் இரவு தூங்கும்முன் ஆனியன் ஜூஸை பாதங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும். அப்படி செய்வதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
 
வெங்காயத்தில் ஃபாரிக் ஆசிட் உள்ளது. நம்முடைய பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே ஃபாரிக் ஆசிட் ஊடுருவி நம் மூளைக்குச் சென்றுவிடும். இதனால் மூளை சுறுசுறுப்படையும்.
 
இரவு வேலைகளில் உடல் ஓய்வாக இருக்கும் போது தலை முதல் கால் வரை இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த ஓட்டத்தின் போது வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் நம் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு உடலில் கலக்கும். இதனால் குடலில் உள்ள பிரச்சினைகள், சிறுநீர்ப்பை பிரச்சினைகள், சிறுநீர்க்கற்கள், முடிப்பிரச்சினைகள், உடலில் உள்ள கொழுப்பு ஆகியவை தீர்ந்துவிடும். பாதத்தில் உள்ள திசுக்கள் நல்ல ஈரப்பதத்துடன், சொரசொரப்பின்றி அழகாக இருக்கும்.
 
சிலருக்கு கால்களில் வியர்வை அதிகரித்து வாடை அடிக்கும். இந்த வாடையைப் போக்க வெங்காயத்தைப் பாதத்தில் தடவுவது மிகவும் நல்லது.
 
வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.
 
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments