Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துளசி நீரை தொடர்ந்து குடித்துவருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

துளசி நீரை தொடர்ந்து குடித்துவருவதால் கிடைக்கும் நன்மைகள் !!
துளசி இலையில் இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால் புதிதாக உண்டாகும் நோய் தொற்றுகளை ஆரம்பத்தில் அழிக்கும் தன்மை துளசிக்கு உண்டு.

இதை தீர்த்தமாக குடிப்பதன் மூலமாக உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும், எனவே துளசி இலையை இரவு முழுவதும் நீரில் போட்டு நன்கு ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
 
அதைப்போல் துளசி இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதன் மூலமாக அவ்வப்போது ஏற்படும் சளி பிரச்சனைகளிலிருந்து  விடுபடலாம்.
 
துளசி இலை உங்கள் இருதயத்தை பாதுகாக்கும், துளசியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளது. எனவே இது உங்கள்  உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய தொடர்பான வலிகளை குறைக்கிறது. அதைப்போல் துளசி இலையில் கிருமிகள் எதிர்ப்பு தன்மை இருப்பட்தினால் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை முழுமையாக குறைக்கிறது.
 
துளசியில் இருக்கும் எதிர்ப்புத்தன்மை உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. அதேபோல் கல்லீரலில் கொழுப்புகள் உண்டாவதை  குறைத்து அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. 
 
உடலில் இருக்கும் கால்சியம் மற்றும் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும் இந்த பிரச்சினையை ஆரம்பத்தில் தடுப்பதற்காக நீங்கள்  தினமும் துளசி கலந்த நீரை பருக வேண்டும். 
 
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து நீரிழிவு பிரச்சனையை தடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரை குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் பிஎச் அளவு சமமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழங்களை கொண்டு ஸ்கரப் செய்து முகத்தை பளபளக்க செய்வது எப்படி...?