Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவில் சூரியகாந்தி எண்ணெய்யை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

Webdunia
சூரியகாந்தி எண்ணெய்யில் அளவிற்கு அதிகமான நன்மைகள் உள்ளதோடு, நம் உடம்பை ஆரோக்கியமானதாகவும் மற்றும் வலுவானதாகவும் வைத்து இருக்க உதவும் நன்மைகளை கொண்டுள்ளது. 

சூரியகாந்தி எண்ணெய்யில் வைட்டமின் E அதிகமாகவும் மற்றும் கொழுப்பின் அளவு குறைவாகவும் உள்ளது. தவிர, இதில் உங்கள் இதய நலன்களைப் பேணும் பைட்டோஅமிலங்கள போன்ற‌ கோலைன் மற்றும் பீனோலிக் அமிலம் போன்ற சில நன்மை தரும் அமிலங்கள் உள்ளது.
 
சூரியகாந்தி விதையிலும், அதனுடைய எண்ணெய்யிலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. சூரியகாந்தி விதைகளில் அதிக நார்சத்து இருப்பதால், நமது ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது. 
 
மன அழுத்தத்தை உண்டாக்கக் கூடிய கார்டிசால் ஹார்மோனை குறைக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நிம்மதியான தூக்கம் நமக்கு கிடைக்கிறது. மேலும் சூரியகாந்தி விதையில் புரத சத்து அதிகமாக இருக்கிறது.
 
முகப்பருக்களை நீக்கி, சேதமடைந்த தோல்களை சரி செய்யும் தன்மை சூரியகாந்தி எண்ணெய் உண்டு. இது தவிர இதய பிரச்சனை மற்றும் அழற்சி போன்றவற்றை எதிர்த்து போராடும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
 
சூரியகாந்தி எண்ணெய்யை பயன்படுத்துவதால் மூட்டு வலியினால் ஏற்படும் கவலைக்கு நிரந்தர தீர்வாக உள்ள‌து. மேலும் சூரியகாந்தி எண்ணெயினால் முடக்கு வாதத்தை தடுக்க‌ உதவுகிறது.
 
சூரியகாந்தி எண்ணெய்யில் காணப்படும் கரோட்டினாய்டுகள் கருப்பை, நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் இவற்றை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிற‌து. மேலும், கண்புரையை தடுக்கும் ஒரு நல்ல வைட்டமின் ஏ மூலக்கூரை இது அதிக அளவில் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments