Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைகளில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்ய அழகு குறிப்புகள்....!

Webdunia
எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம். இவ்வாறு இயற்கை பொருட்களை பயன்படுத்துவதால், கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன், கை மற்றும் கால்கள் மிகவும் மென்மையாக  இருக்கும்.
வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து அவற்றை கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய, சிறிது நேரம் கழித்து,  குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன், கை மற்றும் கால்கள்  மிகவும் மென்மையாக இருக்கும்.
 
தினமும் ஆலிவ் ஆயிலை தங்களது கை மற்றும் கால்களில் நன்றாக தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைய செய்வதுடன், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி  அளிக்கின்றது.
 
அன்னாசி பழத்தை பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அவற்றை கை மற்றும் கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், அதன்பிறகு குளிர்ந்த நீரால், கைகள் மற்றும் கால்களை கழுவவும். இவ்வாறு செய்வதினால் கைகள் மற்றும்  கால்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமையான நிறங்கள் மறைந்துவிடும்.
 
தக்காளியை சரி பாதியாக அறிந்து கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறங்கள் மற்றும் சுருக்கங்கள் அனைத்தும் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments