Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்கொடி மூலிகையில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா....?

Webdunia
கட்டுக்கொடி உடலுக்கு குளிச்சியை உண்டாக்கி உமிழ்நீரை பெருக்கும். கட்டுக்கொடி இலையை பாக்களவு எடுத்து உண்டுவர சீதபேதி, மூலக்கடுப்பு குணமாகும். 
 

கட்டுக்கொடி இலை மற்றும் வேப்பங்கொழுந்து இவற்றை சம அளவு எடுத்து காலை மாலை என இருவேளை உண்டுவர நீரழிவு நோய், களைப்பு, அதீத தாகம், தேக எரிச்சல் குணமாகும். 
 
கட்டுக்கொடி இலையை அரைத்து ஓரு எலுமிச்சை பழ அளவுக்கு எடுத்து தயிருடன் கலந்து பெண்களுக்கு கொடுக்க பெரும்பாடு தீரும்.கட்டுக்கொடி இலையில் சாறு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து அப்படியே வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். 
 
இந்த ஜெல்லை அதிகாலை வேளையில் சாப்பிட்டு வர வெள்ளை, வெட்டை, சீத கழிச்சல் குணமாகும். விந்தானது கட்டும். மூலநோய் குணமாகும். ஆண்மை பெருகும். நீர்கடுப்பு, உடல்சூடு, உடல் எரிச்சல் சரியாகும்.
 
கட்டுக்கொடி இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஓரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர அதிகப்படியான உதரப்போக்கு  குணமாகும்.
 
விந்து முந்துதல், நீர்த்துப்போன விந்துவை கட்டுப்படுத்தும் சக்தியும் இந்த மூலிகைக்கு உண்டு. ஆண், பெண் இருவர்களின் பாலுணர்வு சம்மந்தமான நோயை  சரிசெய்யும் சக்தியும் இந்த மூலிகைக்கு உண்டு. நாட்பட்ட மூட்டுவலியையும் சரிசெய்யக் கூடியது.
 
உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. எலும்பு தசைகளையும் வலுப்படுத்தக் கூடியது. கட்டுக்கொடியை காலை, மாலை  என இருவேளை 2 கிராம் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும். உடல் பொலிவும் பெறும்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்