Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை மருத்துவத்தில் அமுக்கிரா கிழங்கின் அற்புத பயன்கள்...!!

Webdunia
அமுக்கிரா கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.
அமுக்கிரா கிழங்கு பொடி - 1 பங்கு, கற்கண்டு - 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.
 
அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.
 
அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு  பற்றிடலாம்.
 
அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.
 
அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையி ன் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும்  உதவுகின்றது. 
 
உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை இது தீர்க்க உதவும். இது உடலின் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு  சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். 
 
நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதே வேளையில் மூட்டு களின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசித்த பின் புசி.. பசிக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?

அடுத்த கட்டுரையில்
Show comments