பொடுகை முற்றிலும் நீக்கும் அற்புத இயற்கை வைத்திய குறிப்புகள் !!

Webdunia
இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் காலையில் சிறிது நீர்விட்டு அரைத்து, தலையில் பேக்காக போடவும். அரை மணி நேரம் கழித்து மிதமான  ஷாம்புவால் அலசி வரலாம்.

கொழுந்து இலைகளாக வேப்பிலையைத் தேர்ந்தெடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைத் தலையில் பேக்காக போடவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
ஆரஞ்சு தோல் பவுடருடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் பேக்காக போடுங்கள். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள்.
 
கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். முட்களை நீக்கி, தோலை எடுக்கவும். நடுவில் உள்ள ஜெல்லை நன்கு அலசி கொள்ளவும். இதைக் கூழாக்கி, முடி மற்றும் மண்டையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் ஷாம்பு போட்டு அலசிவிடுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள்.
 
ஆலிவ் எண்ணெய்யை முடியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். எப்போதும் பயன்படுத்தும் ஷாம்புவை எடுத்து, நன்கு தேய்த்து, மசாஜ் செய்து அலசிவிடுங்கள். மிக்ஸிங் தேங்காய் எண்ணெய் , எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து, மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊறவிடவும். பொடுகு  நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments