Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம்...!!

Webdunia
பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஆதலால் வளரும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான உணவாகக் கருதப்படுகிறது.

பாதாமில் இதயநலத்திற்கு தேவையான அர்ஜினைன், மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.
 
கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவினை அதிகரிக்க இது செய்கிறது. எலும்புகள் மற்றும் பற்களின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பிற்குத்  தேவையான பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியத்தை பாதாமானது கொண்டுள்ளது.
 
தோலின் பாதுகாப்பிற்கு பாதாமானது வைட்டமின் ஈ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். இவை சருமத்தை வழவழப்பாக்குவதோடு சருமம் வயதாவதையும் குறைக்கிறது.
 
பாதாமில் உள்ள கொழுப்புக்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதோடு காயங்களை குணப்படுத்தவும் உதவுகிறது. இதில் காணப்படும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதோடு குடல் இயக்கங்களை சீராக்கி நச்சினை வெளியேற்றி ஆரோக்கியமான உடல்எடை இழப்பினை உண்டாக்குகிறது.
 
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஃபோலிக் அமிலத்தை பாதாமானது அதிகளவு கொண்டுள்ளது. ஃபோலிக் அமிலம் ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு திசுக்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. ஆகவே கர்ப்பிணி பெண்கள் தங்களின் ஆரோக்கியம்  மற்றும் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு பாதாமை உட்கொள்வது நல்லது.
 
பாதாமில் உள்ள கொழுப்பு அமிலங்கள் விட்டமின் ஏ, டி போன்ற கொழுப்பில் கரையும் விட்டமின்களை நமது உடல் உறிஞ்ச உதவுகிறது. மேலும் இது இரைப்பையில் அமிலத்தன்மையைக் குறைத்து உடலின் பி.எச்-ஐ சமப்படுத்தும் திறன் கொண்டது.
 
உடலின் பி.எச். சமநிலையானது ஆரோக்கியமான செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் தடுப்புக்கு ஆகியவற்றிற்கு மிகவும் அவசியமானது. இதில் உள்ள  ஊட்டச்சத்துக்கள் ஊட்டச்சத்து பிரித்தெடுத்தல், கொலஸ்ட்ரால் தொகுப்பு மற்றும் பித்த அமில உற்பத்தியில் ஈடுபடும் செரிமான நொதிகளை கட்டுப்படுத்துதல்  ஆகியவற்றிற்கும் உதவுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments