Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கு நிவாரணம் தரும் பாதாம் பிசின் !!

Webdunia
பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வரட்ச்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.

கால தாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல், செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
 
நீண்ட நாள் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.
 
ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை  நீங்கும்.
 
பாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments