க‌ட்டிக‌ள் பழு‌த்து உடைய

Webdunia
வெள்ளி, 14 மே 2010 (14:44 IST)
பிரமத் தண்டின் விதையை எடுத்து வந்து நீர்விட்டு அரைத்து கட்டியின் மேல் பூசிவிடவும். 2 மணிக்கு ஒரு முறை புதிதாக பூ‌சி‌க் கொ‌ண்டே இரு‌க்க கட்டி தானாக பழுத்து உடைந்து விடும்.

பிரமத்தண்டு விதைகள் முழுவதையும் நீக்கிவிட்டு செடிகள் முழுவதையும் சுத்தம் செய்து சாறு பிழிந்து 12 வயது வரை 1/2 தேக்கரண்டி அளவிலும் அதற்கு மேல் 1 தேக்கரண்டியளவிலும் குடிக்கக் கொடுக்க எல்லா விதமான விஷங்களும் பேதியாகி முறிந்துவிடும்.

அதிகம் பேதியானால் எலுமிச்சைச் சாறு கொடுக்கலாம். மிகவும் களைப்பாக இருந்தால் அரை அரிசி (குருணை) உணவு கொடுக்கலாம்.

இதைப் பாம்பு கடிக்கு மட்டும் கொடுத்தால் நல்லது. மற்ற விஷங்களுக்குக் கடிவாயில் சாற்றை விட்டு வந்தால் விஷம் தலைக் கேறாமல் முறியும்.

பிரமத் தண்டின் விதையை பொடி செய்து இலையில் சுருட்டிப் பீடி ‌பிடி‌ப்பது போல புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற் சொத்தை, புழுக்கள் வெளியேறும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments