Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் தொற்று.. குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பா?

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (09:05 IST)
கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை உடல் ஊனத்துடன் பிறக்க வாய்ப்பு. 

 
மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கு  ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கர்ப்பிணியை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக ஜிகா கண்டறியப்பட்ட 14 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என்று தெரிய வந்துள்ளது.
 
ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் ஜிகா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல், தோலில் சொறி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்டவை ஸிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். 1947 ஆம் ஆண்டு உகாண்டா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே, கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை உடல் ஊனத்துடன் பிறக்க வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments