Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை நிரூபிக்க தற்கொலை செய்து கொள்! காதலியின் தந்தை போட்ட வினோத கண்டிஷன்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (19:42 IST)
தனது மகளை காதலித்த இளைஞரை 'நீ தற்கொலை செய்து உன் காதல் புனிதமானது என்பதை நிரூபித்து காட்டு, அதன் பின்னர் உனக்கு எனது மகளை திருமணம் செய்து வைக்கின்றேன்' என்று வினோத கண்டிஷன் போட்ட தந்தையால் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் விபரீதம் ஏற்பட்டுள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அதுல். இவர் பாஜகவின் நிர்வாகியும் ஆவார். இவர் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலித்து வந்தார். ஆனால் பெண்ணின் தந்தை இந்த காதலை ஏற்று கொள்ளவில்லை. தனது காதல் புனிதமானது என்று அதுல் பலமுறை காதலியின் தந்தையிடம் எடுத்து கூறியுள்ளார். ஒருகட்டத்தில் 'உன்னுடைய காதல் புனிதமானது என்றால் நீ தற்கொலை செய்து உன் காதலை நிரூபித்து காட்டு, அதன் பின்னர் உங்கள் இருவரின் திருமணம் நடக்கும்' என்று கூறியுள்ளார்.
 
இதனை சீரியஸாக எடுத்து கொண்ட அதுல், நேற்றிரவு காதலியின் வீட்டின் முன் நின்று காதலி மற்றும் அவருடைய தந்தை முன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை உடனே அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மகளுடன் தலைமறைவானார்.
 
தற்போது அதுல் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காதலியின் தந்தை கூறிய விபரீத கண்டிஷனால் ஒரு இளைஞரின் வாழ்க்கையே கிட்டத்தட்ட முடிவுக்குவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments