Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக தேர்தல்: பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா...

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (13:19 IST)
கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், தனது பதவியேற்பு நாளை எடியூரப்பா அறிவித்துள்ளார். 
 

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், 17 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. நேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடியூரப்பா இதை பகிரங்கமாக அறிவித்தார்.
 
மேலும் இது குறித்து பிரச்சாரத்தின் போது அவர் பேசியது பின்வருமாறு, கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த பின் பாஜக அலை எழுந்துள்ளது. 
 
நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 130 தொகுதிகளையாவது நாங்கள் வெல்வது உறுதி. தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக எப்படிப்பட்ட பலமான கட்சி என்பதை மற்ற கட்சிகள் உணரும். 
 
வரும் 17 ஆம் தேதி, பெங்களூரிலுள்ள, கண்டீரவா விளையாட்டு அரங்கில் நான் முதல்வராக பதவியேற்பேன். பிரதமர் மோடிக்கும் விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments