Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்பூர் சிறையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2015 (07:05 IST)
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
 

 
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற யாகூப் மேமனின் கருணை மனுக்களை மகாராஷ்டிர ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் நிராகரித்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.
 
அவருடைய மறுசீராய்வு மனுவும், உச்ச நீதிமன்ற அமர்வால் நிராகரிக்கப்பட்டது. நேற்று மீண்டும் கடைசிநேர கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தார் யாகூப் மேமன்.
 
ஆனால் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறையின் அறிவுரையின்படி, கருணை மனுவை நிராகரித்தார். மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு அவசர மனு ஒன்றை யாகூப் மேமனின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.
 
நள்ளிரவு 2 மணிக்கு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 5 மணியளவில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கவோ, தள்ளிப்போடவோ முடியாது என்று தண்டனையை உறுதி செய்தனர்.
 
அதன்படி, இன்று காலை சரியாக 6:35 மணியளவில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments