Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 24 மே 2021 (11:57 IST)
வங்கக் கடலில் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் என தகவல். 

 
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று உருவாகி வலுப்பெற்றுள்ளது.  
 
மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
வங்கக் கடலில் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது என்றும் உம்ப்பன் புயல் மற்றும் டவ்தே புயல் போன்று அதிதீவிரமான ஒன்று என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments