Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரை கொலை செய்ய முயற்சி செய்யும் மருமகள் : அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2016 (11:50 IST)
தன்னுடைய மாமியாரை ஒரு மகள் கண்டபடி தாக்குவதும், கொலை முயற்சி செய்வதுமான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. 


 

 
உத்திரப்பிரதேசத்தில் மீரட்டில் வசித்து வருபவர் சந்தீப் ஜெயின். இவரின் மனைவி சங்கீதா ஜெயின். அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சந்தீப்ஜெயினின் 70 வயதுடைய தாயை, சங்கீதா ஜெயின் அடித்து துன்புறுத்தும் காட்சியும், அவரை கழுத்தை நெருக்கி கொலை செய்ய முயற்சி செய்வதும், அவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.
 
தன் மனைவிக்கு நடவடிக்கையை தெரிந்து கொள்ளவே, அவருக்கு தெரியாமல், அந்த கேமராவை பொருத்தியிருக்கிறார் சந்தீப் ஜெயின். ஆனால் இப்போதும் தன் மனைவி திருந்தவில்லை என்று வருத்தப்படுகிறார். 
 
இந்த வீடியோவை சமூக ஆர்வலர் வஸ்தவா தனது பேஸ்புக் பகக்த்தில் வெளியிட்டுள்ளார். மேலும் உத்திரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மாமியாரை தாக்கிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments