Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? - சுஷ்மாவுக்கு ராகுல் கேள்வி

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (10:09 IST)
லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிப்படுத்தினால் நாடாளுமன்றம் செயல்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
 

 
நாடாளுமன்றத்தில் திங்களன்றும் லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரம் எழுப்பப்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கிவரும் நிலையில், போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால், ஆதரவு கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி திடீரென காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.
 
இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிப்படுத்தினால் நாடாளுமன்றம் செயல்படும் என்றும், நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அடிப்படை பிரச்சனைகளை எழுப்ப வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ‘ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் பொருளாதாரக் குற்றவாளியான லலித் மோடி இடையே நடைபெறும் வர்த்தகம் தொடர்பான உண்மையையும் பிரதமர் மோடி முற்றிலுமாக நிராகரிக்கிறார்” என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments