Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதல் விவகாரம் ; கணவனை கொன்ற மனைவி : காட்டிக் கொடுத்த மட்டன் சூப்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (17:40 IST)
ஆந்திராவில் கள்ளக்காதலனோடு வாழ்வதற்காக, கணவரை கொன்று விட்டு, காதலனுக்கு அறுவை சிகிச்சை செய்து கணவர் என நம்பை வைத்து நாடகமாடிய வழக்கில், ஒரு மட்டன் சூப் மூலம் உண்மை வெளிப்பட்டது தெரியவந்துள்ளது.

 
சுவாதி ரெட்டி என்பவருக்கு சுதாகர் என்பவரோடு திருமணம் நடந்தது. ஆனால், இவருக்கு ராஜேஷ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால், தன் காதலரோடு வாழ வேண்டும் என முடிவெடுத்த சுவாதி, தனது கணவரை, காதலரோடு சேர்ந்து கொன்றுவிட்டு பின்னர் காதலர் முகத்தில் ஆசிட் வீசி அவருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். பின்னர், மாமனார் வீட்டில் சுதாகர் விபத்தில் சிக்கியதாகவும் அதனால் அவரது முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
மாமனார் வீட்டில் இருப்பவர்களும் இதை நம்பியுள்ளனர். இதன் பின்னர் தன் காதலருடன் பிரச்சனை ஏதுமின்றி வாழ்ந்துள்ளார். இந்நிலையில், காதலர் ராஜேசின் நடவடிக்கைகள் சுதாகரோடு ஒத்துபோகாததால் வீட்டில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, சுதாகருக்கு மட்டன் சூப் என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆனால், ராஜேஷுக்கு அதை கொடுக்கும் போது, நான் சைவம். எனக்கு வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால், அவரின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியது போது மழுப்பலான ராஜேஷ் பதில் அளித்துள்ளார். எனவே, சந்தேகத்தில் மாமனார் வீட்டார் போலீஸில் புகார் அளித்துள்ளனர். பின்னர், போலீஸார் ராகேஷை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
 
சுதாகரின் ஆதார் அடையளங்கள் மூலம் ராஜேஷை சோதனை செய்துள்ளனர். ஆனால், இவை அனைத்தும் ஒத்துபோகவில்லை. இதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட போலீஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்ட பின் உண்மை வெளிவந்துள்ளது. தற்போது போலீஸார் ராஜேஷ் மற்றும் சுமதி ரெட்டியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments